தமிழ்நாடு

"சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க என்ற கட்சியே இருக்காது" - தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு பேட்டி!

சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க என்ற கட்சியே இருக்காது என தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

"சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க என்ற கட்சியே இருக்காது" - தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 'எல்லோரும் நம்முடன்' திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு.

பின்னர் திருக்குவளையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் கலைஞரின் மார்பளவு திருவுருவச் சிலைக்கும், முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கும், முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, “நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திடீரென அ.தி.மு.க அரசுக்கு நீட் தேர்வுக்கு எதிராக ஞானோதயம் பிறந்து இருப்பதைக் கண்டு தமிழக மக்கள் எண்ணி நகையாடும் சூழல்தான் நிலவுகிறது. மத்திய அரசின் வேளாண் சார்ந்த திட்டங்களை அ.தி.மு.க அரசு ஆதரிப்பதன் காரணமாக வரும் தேர்தலில் விவசாயிகள், பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

உதயநிதி ஸ்டாலின் தி.மு.க-வில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர், சேப்பாக்கம் தொகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவார்” எனத் தெரிவித்தார்.

அ.தி.மு.கவில் மீண்டும் இரட்டை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, “தற்போது தமிழகத்தில் நடைபெறுவது ஆட்சியே அல்ல, சில காட்சிகள் தான் நடைபெறுகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்தக் காட்சிகளும் இருக்காது. அ.தி.மு.க எனும் கட்சியும் இருக்காது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories