தமிழ்நாடு

“தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: பாஜக, அதிமுக அரசுகளுக்கான சாவு மணி” - கே.பாலகிருஷ்ணன் பளீர்!

செப்டம்பர் 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்ட மசோதாக்களுக்கு 16ம் தேதி அதிமுக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது என கே.பாலாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: பாஜக, அதிமுக அரசுகளுக்கான சாவு மணி” - கே.பாலகிருஷ்ணன் பளீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயிகள் சிறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டுமென்று வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் தோழமைக்கட்சிகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, தாயகம் கவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

“தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: பாஜக, அதிமுக அரசுகளுக்கான சாவு மணி” - கே.பாலகிருஷ்ணன் பளீர்!

அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

“தி.மு.க கூட்டணி நடத்தும் ஆர்ப்பாட்டம் பா.ஜ.க அரசுக்கு மட்டும் அல்ல அ.தி.மு.க அரசுக்கும் சேர்த்து சாவு மணி அடிக்கும் ஆர்ப்பாட்டம்.

பா.ஜ.க அரசு 21ஆம் தேதிதான் வேளாண் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால் அதிமுக அரசு 16ஆம் தேதியே சட்டத்தை ஆதரித்துவிட்டது. அ.தி.மு.க ஆட்சி என சொல்வதை விட மோடி ஆட்சி என தமிழக அரசின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த சட்டத்தால் விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. சென்னை போன்ற பெருநங்கரங்களில் வாழும் அத்தனைபேரும் பாதிக்கப்படுவார்கள். விளைபொருட்கள் பதுக்களை நியாயப்படுத்தியுள்ளது பா.ஜ.க. ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

“தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: பாஜக, அதிமுக அரசுகளுக்கான சாவு மணி” - கே.பாலகிருஷ்ணன் பளீர்!

விவசாயிகளை விவசாயத்தில் இருந்து வெளியேற்றி கார்பரெட் கையில் கொடுக்கப்போகிறார்கள். இந்தியாவை ஆள்வது மோடி அல்ல கார்பரெட்தான். எதிர்கட்சிகள் சட்டத்தை படிக்காமல் பேசுகிறார்கள் என சொல்லும் அமைச்சர் துஎரைக்கண்ணு, முதலமைச்சர் பழனிச்சாமி தைரியம் இருந்தால் ஒரே மேடையில் விவாதிக்க வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இன்று நடைபெரும் அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அவர்களுக்குள் என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே மோடிக்கு யார் அதிகம் காவடி தூக்குவது என்ற போட்டி நடக்கிறது.”

banner

Related Stories

Related Stories