தமிழ்நாடு

இந்தி மொழியில் பேனர் : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் அதிர்ச்சி!

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இந்தி மொழி இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தி மொழியில் பேனர் : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அடையாளம் என்பதை விட்டுவிட்டு ஒரே மொழியைத் திணிக்க மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்தில் தொடர்ந்து முயன்று வருகிறது.

இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியில் பேனர் வைக்கப் பட்டிருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் ”புதுக்கோட்டை” என எழுதி வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக இந்தியிலும் மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தி மொழியில் பேனர் : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் அதிர்ச்சி!

இந்தக் கூட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையேற்று நடத்திய நிலையில் இந்தி மொழியில் புதுக்கோட்டை என ஆட்சியர் பின்னால் இருந்த பேனரிலிருந்தது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்ததால் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி மொழியில் பேனர் : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் அதிர்ச்சி!

இதுகுறித்து ஒரு விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி கூறுகையில், ”பல ஆண்டு காலமாகத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறைதீர் கூட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் தற்போது ’புதுக்கோட்டை’ என இந்தி மொழியிலும் எழுதப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விவசாயிகள், தமிழகத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எதற்கு இந்தி மொழியைத் திணிக்கிறீர்கள் என்று வேள்வி எழுப்பினர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்பட வேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தியை மட்டும் இந்தியாவின் அடையாளம் ஆக்க முயல்வது இந்திய ஒருமைப்பாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படும் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கும் அதற்கு உடந்தையாக இருக்கும் இந்த எடப்பாடி அரசுக்கும் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

banner

Related Stories

Related Stories