தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் கொரோனா தாண்டவம்: ஒரே நாளில் 1,280.. பிற மாவட்டங்களில் 4,511.. மேலும் 80 பேர் பலி!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 80 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகியிருக்கிறார்கள்.

சென்னையில் மீண்டும் கொரோனா தாண்டவம்: ஒரே நாளில் 1,280.. பிற மாவட்டங்களில் 4,511.. மேலும் 80 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிதாக 94 ஆயிரத்து 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழகத்தில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.80 லட்சத்து 808 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக புதிதாக 1000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் 1,280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மீண்டும் கொரோனா தாண்டவம்: ஒரே நாளில் 1,280.. பிற மாவட்டங்களில் 4,511.. மேலும் 80 பேர் பலி!

அதற்கடுத்தபடியாக கோவையில் 596, சேலத்தில் 8, செங்கல்பட்டில் 296, திருப்பூரில் 282, கடலூரில் 256, திருவள்ளூரில் 202 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 8 மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 80 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதுவரையில், 9,313 பேர் தமிழகத்தில் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, ஒரே நாளில் 5,706 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுகாறும் தமிழகத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். ஆகையால் , 46 ஆயிரத்து 341 பேருக்கு தற்போது கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories