தமிழ்நாடு

விஜிபி-யின் ‘சிலை மனிதன்’ செக்யூரிட்டி வேலைக்குச் சென்ற சோகம் : 30 வருட வாழ்வைப் புரட்டிப்போட்ட கொரோனா!

விஜிபி-யில் 30 ஆண்டுகளாக சிலை மனிதனாக இருந்தவரை செக்யூரிட்டி வேலைக்கு அனுப்பியது கொரோனா தொற்று.

விஜிபி-யின் ‘சிலை மனிதன்’ செக்யூரிட்டி வேலைக்குச் சென்ற சோகம் : 30 வருட வாழ்வைப் புரட்டிப்போட்ட கொரோனா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். 60 வயதான இவர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான விஜிபி யுனிவெர்செல் கிங்டமில் கடந்த 30 வருடங்களாக சிலை மனிதனாகப் பணியாற்றி வந்துள்ளார். 

கடந்த 1991ம் ஆண்டு முதல் சென்னையில் சிலை மனிதனாக பார்க்கப்பட்ட அப்துல் அஜீஸ், இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் சிலை மனிதனாக பணியாற்ற வாய்ப்பு இல்லாமல் போயிவிட்டது.

தன்னுடைய வாழ்க்கையில் தினந்தோறும் 4 மணி நேரம் சிலை மனிதாக மாற்றிக்கொண்டு, மற்ற நேரங்களில் அனைவரிடமும் சிரித்துப் பேசி சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். 1991ம் ஆண்டு சிலை மனிதனாக மாறிய அஜீஸின் அப்போதைய மாதம் ஊதியம் 600 ரூபாய். 600 ரூபாயில் துவங்கி சமீபத்தில் 8,400 ரூபாய் மாத ஊதியமாக வாங்கி வந்துள்ளார்.

விஜிபி-யின் ‘சிலை மனிதன்’ செக்யூரிட்டி வேலைக்குச் சென்ற சோகம் : 30 வருட வாழ்வைப் புரட்டிப்போட்ட கொரோனா!

சாதாரன மனிதர்களால் சிலையைப் போல அசையாமல் நிற்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும் மக்கள் வியக்கும் வகையில் சிலை மனிதனாக நிற்கும் அஜீஸை சிரிக்க வைக்க சுற்றுலா பயணிகள் பல்வேறு யுக்தியை கையாண்டதாகவும் ஆனால் இதுவரை யாரும் சிலை மனிதனை அசைத்துக் கூட பார்த்ததில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

காலை 9:30 மணிக்கு சிலை மனிதனாக மாறும் தாஸ் 4 மணி நேரம் ஆடாமல் அசையால் சிலைபோன்று நிற்பது வழக்கம். இவரைத் தொடர்ந்து மற்றொரு சிலை மனிதர் நண்பகல் 2 மணி முதல் 7 மணி வரை சிலை மனிதராக மாறுவார்.

தான் சிலை மனிதனாக மாறும் தருணம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அந்த நேரத்தில் யார் என்ன செய்தாலும் தன்னுடைய கவனம் சிதறாமல் சிலையாகவே இருப்பேன் என்றும் தன்னுடைய பணி நேரம் முடிந்ததும் அந்த ஆடையை கழற்றிவிட்டால் நானும் சாதாரன மனிதனாக எல்லோரிடமும் சிரித்து பழகுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

விஜிபி-யின் ‘சிலை மனிதன்’ செக்யூரிட்டி வேலைக்குச் சென்ற சோகம் : 30 வருட வாழ்வைப் புரட்டிப்போட்ட கொரோனா!

இந்நிலையில், கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகம் பரவியதால் தமிழக அரசு பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் வி.ஜி.பி பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டது. நிர்வாகம் வி.ஜி.பி பூங்காவை மூடியதால் சிலை மனிதன் அஜீஸ்க்கு வேலை இல்லாத நிலையில் வீட்டிலிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

கடந்த 5 மாதங்களாக வேலையின்றி வீட்டில் இருந்துவந்த சிலை மனிதன் அஜீஸ் குடும்ப சூழ்நிலைக்காக வேறு ஒரு வேலையை தேடிய நிலையில் கடந்த செப்.1ம் தேதியிலிருந்து செக்யூரிட்டி வேலைக்கு செல்கிறார். சாதாரன மனிதர்களை வாட்டி வதைத்த கொரோனா தொற்று, ‘சிலை மனித’னையும் அசைத்துள்ளது.

மக்கள் சிந்தித்து தனிமனித இடைவெளியோடு செயல்பட்டால் மட்டுமே தமிழகத்திலிருந்து கொரோனாவை முழுமையாக ஒழித்து வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். 

- இ.ஜாபர்

banner

Related Stories

Related Stories