தமிழ்நாடு

“மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்” : பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை!

பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

“மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்” : பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது நினைவுகளைப் போற்றும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, சென்னை அண்ணாசாலை சிம்சன் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதுமட்டுமல்லாமல், தனது ட்விட்டர் பக்கத்தில், “மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17!சமூகநீதி-சமத்துவம் - சாதியொழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம்.

மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!சுயமரியாதைச் சுடர் வெல்க” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories