தமிழ்நாடு

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன்: பொருளாளர் டி.ஆர்.பாலு : பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்வு!

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன்: பொருளாளர் டி.ஆர்.பாலு :  பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக இந்த பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது.

மேலும், இந்த கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அமைப்பாளர்கள் என 3500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேப்போல், தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு-வும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன்: பொருளாளர் டி.ஆர்.பாலு :  பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்வு!

பின்னர், பொதுச் செயலாளராக தேர்வான துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்வான டி.ஆர்.பாலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, தி.மு.க சட்டத்திட்ட விதி பிரிவு 17(3)ன் படி, தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக க.பொன்முடி மற்றும் ஆ.ராசா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

banner

Related Stories

Related Stories