தமிழ்நாடு

NEP குறித்து ஆராய குழு அமைப்பு: “பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என தங்கம் தென்னரசு விமர்சனம்!

மத்திய அரசோடு இணக்கமாக இருந்து அடிபிறழாமல் புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்றவே அ.தி.மு.க அரசு துடிக்கிறது என தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

NEP குறித்து ஆராய குழு அமைப்பு: “பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என தங்கம் தென்னரசு விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பள்ளிக்கல்வி சார்ந்த ஒருவரும் நியமிக்கப்படாததற்கு தி.மு.க முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்து விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திடக் குழு ஒன்றினை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்றது. கல்விக்கொள்கை வெளிவந்து ஒரு மாதம் கழித்து ஒருவழியாக இப்போது தான் இந்தக் குழுவை அறிவித்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தக் குழுவில் பள்ளிக்கல்வி சார்ந்து ஒரு கல்வியாளரோ, சமூக செயற்பாட்டாளரோ, ஆசிரிய சமூகத்தைச் சார்ந்த பிரதிநிதியோ அல்லது பள்ளிக்கல்வித்துறையின் கல்வி அலுவலர் ஒருவரோ கூட நியமிக்கப்படவில்லை என்பது இந்தக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தை முதலிலேயே தெளிவாக்கிவிட்டது.

NEP குறித்து ஆராய குழு அமைப்பு: “பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என தங்கம் தென்னரசு விமர்சனம்!

மொழிக் கொள்கை, தொடக்க நடுநிலை வகுப்புகளில் பொதுத் தேர்வு, தொழிற்கல்வி, பள்ளி வளாகங்கள் போன்ற பல முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கி இருக்கும் பள்ளிக்கல்வி விஷயத்தில் இந்த அரசுக்கு கிஞ்சிற்றும் அக்கறை இல்லை என்பதோடு; அவற்றில் எல்லாம் மத்திய அரசோடு இணக்கமாக இருந்து அடிபிறழாமல் இந்தக் கல்விக் கொளகையை நிறைவேற்றவே அ.தி.மு.க அரசு துடிக்கிறது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

தவிர, துணைவேந்தர்கள் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் மட்டும் இடம் பெற்று முக்கிய கல்விக் கொள்கையை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதாகச் சொல்லப்படும் இந்த குழுவுக்கு ஒரு கல்வியாளர் தலைவராக இல்லை என்பதும்; மாறாக, உயர்கல்வித்துறை செயலாளரே அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருப்பதும் நிச்சயம் ஏற்கத்தக்கதல்ல.

அரசின் அபிலாஷைகளை அட்சரம் பிசகாமல் அப்படியே குழுவின் பரிந்துரைகளாக மாற்றி அளிக்கும் வகையில் இத்தகைய குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதே வெறும் கண்துடைப்பு நாடகம் அன்றி வேறல்ல! இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்!

banner

Related Stories

Related Stories