தமிழ்நாடு

“5,000 பேர் மீது நடவடிக்கை.. ஊதியக் குறைப்பு” : ஆசிரியர் தின வாழ்த்துச் சொல்ல தகுதி இருக்கிறதா முதல்வரே?

ஆசிரியர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய சலுகைகள், பதவி உயர்வு, சம்பளம் என பலவற்றை மத்திய - மாநில அரசுகள் தட்டிப் பறித்திருக்கின்றன.

“5,000 பேர் மீது நடவடிக்கை.. ஊதியக் குறைப்பு” : ஆசிரியர் தின வாழ்த்துச் சொல்ல தகுதி இருக்கிறதா முதல்வரே?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், மாணவர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் ஆசிரியர்களுக்கு தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நாளில், ஆசிரியர் தினம் குறித்தும் ஆசிரியர்களின் சேவை, தியாகம் குறித்து பலரும் பாராட்டி எழுதி வருகின்றனர். ஆனால் இது ஒன்று மட்டும் ஆசிரியர்களின் உண்மையான அர்பணிப்புக்கு போதுமா என்றால் இல்லை. குறிப்பாக, கடந்த காலங்களில் மத்திய - மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய சலுகைகள், பதவி உயர்வு, சம்பளம் என பலவற்றை தட்டிப்பறித்திருக்கிறது.

ஆசிரியர்கள் தினத்திற்கு முந்திக்கொண்டு வாழ்த்துச் செல்லும் இதே தமிழக முதல்வர்தான், பல ஆண்டுகளாக அவர்களின் எந்த கோரிக்கைக்கும் செவிசாய்க்காமல் ஆட்சியில் அமர்ந்துள்ளார். இந்தச் சூழலில், ஆசிரியர்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் நடந்த அவலங்களை சுட்டிக்காட்டுவதே இந்த கட்டுரை தொகுப்பு...

“5,000 பேர் மீது நடவடிக்கை.. ஊதியக் குறைப்பு” : ஆசிரியர் தின வாழ்த்துச் சொல்ல தகுதி இருக்கிறதா முதல்வரே?

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்தாண்டு போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் என பல்வேறு வகையில் நடவடிக்கையில் எடப்பாடியின் அ.தி.மு.க அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, அ.தி.மு.க அரசு 2019ம் ஆண்டு மே மாதம், அரசு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலில், போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் 4,001 பேருக்கான பதவி உயர்வை ரத்து செய்துள்ளது.

அதேபோல், 2019ம் ஆண்டு ஜூன் மாதம் அரசு பள்ளிகளில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் 19,426 பேரை கட்டாய பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

“5,000 பேர் மீது நடவடிக்கை.. ஊதியக் குறைப்பு” : ஆசிரியர் தின வாழ்த்துச் சொல்ல தகுதி இருக்கிறதா முதல்வரே?

அதுமட்டுமல்லாமல், கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த 94 ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்கள் 7 ஆண்டுகளாக பணியமர்த்தப்படாமல் உள்ளனர். இதனால் அவர்களது ‘TET’ தேர்வு சான்றிதழ் தற்போது காலாவதியாகியுள்ளது.

அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2013ம் ஆண்டு 94 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 14 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசுப் பணியை தமிழக அரசு வழங்கியது. இந்த நிலையில், 80 ஆயிரம் பேருக்கு 5 ஆண்டுகளில் பணி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனாலும் அதன்பிறகு பணி கிடைக்காமல் காந்திருத்த ஆசிரியர்கள் மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

அதன் அடிப்படையில், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று மேலும் இரண்டு ஆண்டுகள் அரசு நீட்டிப்பு செய்தது. இந்த நிலையில் அந்த நீட்டிப்பும் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி தகுதி தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்க முடியாது என கூறியுள்ளார்.

இதன் மூலம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 80,000 ஆசிரியர்கள் 7 ஆண்டுகளாக பணியமர்த்தாதமல் அ.தி.மு.க அரசு வஞ்சித்துள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு ஆசிரியர் சங்கம் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

இதைவிட கொடுமையாக, தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த காரணத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் தரும் வகையிலும், “எங்களிடம் கேட்காமல் உயர்கல்வி படித்துவிட்டார்கள்” என்று கூறி, சுமார் 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முயன்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்றத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

“5,000 பேர் மீது நடவடிக்கை.. ஊதியக் குறைப்பு” : ஆசிரியர் தின வாழ்த்துச் சொல்ல தகுதி இருக்கிறதா முதல்வரே?

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சரின் வாக்குறுதியைக் காப்பாற்றாமல் தமிழக அரசு மௌனம் காக்கிறது. தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், உயர்கல்வி கற்பதற்கு கல்வித்துறையின் அனுமதி வேண்டி விண்ணப்பித்து காத்திருந்தனர்.

ஆனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களின் இக்கோரிக்கை குறித்து முடிவு எடுக்காததால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே உயர்கல்வி கற்க முனைந்தனர். இவ்வாறு உயர்கல்வி பயின்ற 5,000 ஆசிரியர்கள் விதிமுறைகளை மீறினார்கள் என்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தாலேயே இந்த நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

“5,000 பேர் மீது நடவடிக்கை.. ஊதியக் குறைப்பு” : ஆசிரியர் தின வாழ்த்துச் சொல்ல தகுதி இருக்கிறதா முதல்வரே?

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீதுக் கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது நகை முரணாகத் தோன்றினாலும், அனுமதி பெறவில்லையெனச் சில விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் கூட!” என கடுமையாக விமர்த்துள்ளார்.

இறுதியாக, வெறும் ரூ.7,700 ஊதியம் பெற்றுக்கொண்டு கடந்த 9 ஆண்டுகளாக, மே மாத ஊதியத்தை பெறாமலேயே பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தரவேண்டிய ஊதியம், பதவி உயர்வு குறித்து தற்போது வரை இந்த அரசு யோசித்துள்ளதா என்பதுகூடத் தெரியவில்லை.

அதேபோல், அ.தி.மு.க ஆட்சியில் ஆசிரியர்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து இருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர் சமூகத்தின் மீது உண்மையான மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தால் அவர்களின் பிரச்னைகளை சரிசெய்துவிட்டு வாழ்த்துக் கூறலாம் என ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories