தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாகக் கடந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஓரளவிற்கு நல்ல மழை பெய்தது.

இந்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது,

சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories