தமிழ்நாடு

“தலைவர் கலைஞர் இயற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓர் கூடுதல் வலிமை” - காதர் மொய்தீன் வரவேற்பு!

பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“தலைவர் கலைஞர் இயற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓர் கூடுதல் வலிமை” - காதர் மொய்தீன் வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“அருந்ததியர் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள் ஒதுக்கீடு சரியானதே” உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு டாக்டர் தலைவர் கலைஞர் வலியுறுத்தி வந்த சமூக நீதிக் கொள்கைக்குக் கிடைத்திருக்கிற வெற்றி எனக் கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘அடித்தட்டு மக்களும் அவர்களுக்குரிய வாழ்வியல் உரிமைகளைப் பெற்று, சமூக சமநிலையை அடைந்திடவேண்டும்’ என்கிற சிறந்த கோட்பாட்டினை மிகத் துணிவுடன் தனது தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி தமிழக மக்களின் இதயங்களில் நிறைந்திருப்பவர் மறைந்த முதல்வர் டாக்டர் தலைவர் கலைஞர்.

“தலைவர் கலைஞர் இயற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓர் கூடுதல் வலிமை” - காதர் மொய்தீன் வரவேற்பு!

அவருடைய அறிவுறுத்தலின்படி அன்றைய துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்து, உரிய ஆய்வுகளுக்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு அரசு இதழிலும் வெளியிடப்பட்டு உள்ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை.

சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக மக்கள் எப்போதும் பெருமிதம் கொள்பவர்கள். இச்சிறப்பான கோட்பாட்டிற்கு மேலும் வலிமை சேர்க்கக்கூடியதாக அமைந்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உளமார வரவேற்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories