தமிழ்நாடு

“6,517 கொரோனா  பலிகளுக்கு எடப்பாடி அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்” - கனிமொழி எம்.பி. ட்வீட்!

கொரோனா தொற்றால் தமிழகத்தில் 6400 பேர் பலியானதற்கு எடப்பாடி அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

kanimozhi m.p
twitter kanimozhi m.p
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி வரையில் 3.79 லட்சத்து 385 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 3.19 லட்சத்து 327 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும், நேற்று வரையில் 6,517 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.

இதற்கு அதிமுக அரசு முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கோட்டை விட்டதே காரணம் என பல தரப்பில் இருந்தும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக மக்களவைக் குழு துணைத்தலைவரும் கழக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி கொரோனா பலிகளுக்கு எடப்பாடி அரசு முழுதாக பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், “கொரோனாவுக்கு எதிரான போரில், பாலின பேதமின்றி, அரசியல் காழ்ப்பின்றி, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றுதல் அவசியம். நாட்டிலேயே, மிகச் சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பு இருந்தும் 22 ஆகஸ்ட் அன்று, தமிழகம் 6400 இறப்புகளை எட்டியுள்ளது.

இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு, 2021 தேர்தலை மனதில் வைத்து அதிமுக அரசின் சாதனையாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சித்தரிப்பதே காரணம். 6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories