Corona Virus

சென்னையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா: இன்று ஒரே நாளில் 1,298 பேர் பாதிப்பு - தமிழகத்தின் #CoronaUpdate

தமிழகத்தில் இன்று மேலும் 5,975 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிதாக 68 ஆயிரத்து 111 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழகத்திலேயே இருந்தவர்கள் 5,942 பேருக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 33 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மட்டுமே இன்று 1,298 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் 392, கடலூரில் 380, திருவள்ளூரில் 354, செங்கல்பட்டில் 352, சேலத்தில் 261, காஞ்சியில் 222 என அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா: இன்று ஒரே நாளில் 1,298 பேர் பாதிப்பு - தமிழகத்தின் #CoronaUpdate

அவ்வகையில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் இன்று 4,677 பேருக்கு தொற்று பாதிப்பு உண்டாகியுள்ளது. மேலும் இன்று கொரோனா பாதிப்பால் 97 பேர் இறந்திருக்கிறார்கள். இணை நோய் உபாதைகள் ஏதும் இல்லாமல் கொரோனாவால் மட்டுமே 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை 6,517 ஆக கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மேலும் இன்று 6,047 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். மொத்தமாக 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆகவே தற்போது 53 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories