தமிழ்நாடு

“பஞ்சாயத்து தலைவரின் உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா?” - மு.க.ஸ்டாலின் சாடல்!

பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாதிய பாகுபாட்டால் கொலை மிரட்டலுக்குள்ளான சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“பஞ்சாயத்து தலைவரின் உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா?” - மு.க.ஸ்டாலின் சாடல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் சரிதா, தான் சாதிய பாகுபாட்டுக்கு உள்ளாவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த தன்னை, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர விடாமலும், பெயர்ப் பலகைகளில் ‘ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா’ என எழுத விடாமலும் பாலசுப்பிரமணியம் என்பவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார் சரிதா.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு :

“கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதிரீதியாக அவமானப்படுத்தப்பட்டும், கொலை மிரட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார். தன்னை அவமானப்படுத்துபவர்கள் யார் என்று குறிப்பிட்டே கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு சட்டப்பாதுகாப்பு தர வேண்டும். அவரை மிரட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!”

banner

Related Stories

Related Stories