தமிழ்நாடு

ஊரடங்கில் தலைத்தூக்கும் சூதாட்டம்.. சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட 28 பேர் கைது!

ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சென்னையில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 28 பேர் கைது.

ஊரடங்கில்  தலைத்தூக்கும் சூதாட்டம்.. சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட  28 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள கற்பகம் அவென்யூவில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பட்டினப்பாக்கம் போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலிஸார் இரு தினங்களுக்கு முன்பு இரவு அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது 28 நபர்கள் சேர்ந்து சுமார் 9.55 லட்ச ரூபாய் பணம் வைத்து சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.

ஊரடங்கில்  தலைத்தூக்கும் சூதாட்டம்.. சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட  28 பேர் கைது!

இதனை தொடர்ந்து 28 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டர்.

விசாரணையில் 26 பேரில் செங்கல்பட்டு மாவட்டம் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரும் மாதவரத்தை சேர்ந்த அ.தி.மு.க அம்மா பேரவை நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

ஊரடங்கில்  தலைத்தூக்கும் சூதாட்டம்.. சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட  28 பேர் கைது!

இதில் மகேந்திரன் மற்றும் கோபி என்ற இரண்டு நபர்கள்தான் இந்த சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் என தெரியவந்ததால் இவர்கள் இருவரையும் போலிஸார் கைது செய்தனர்.

மீதம் உள்ள 26 நபர்கள் மீதும் சூதாட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்நிலைய ஜாமினில் விடுதலை செய்தனர். ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அ.தி.மு.க நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுப்பட்டது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories