சினிமா

சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டமாடிய பிரபலங்கள்.. வசமாக சிக்கிய நடிகர் ஷாம்!

சென்னையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட நடிகர் ஷாம் உள்பட 13 பேரை பிடித்து நுங்கம்பாக்கம் போலிசார் விசாரணை.

சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டமாடிய பிரபலங்கள்.. வசமாக சிக்கிய நடிகர் ஷாம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடப்பதாக அப்பகுதி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலிசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டிற்குள்ளேயே கிளப் போல பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டமாடிய பிரபலங்கள்.. வசமாக சிக்கிய நடிகர் ஷாம்!

அதில், நடிகர் ஷாமின் சொந்த வீட்டில் சூதாட்டம் நடந்துள்ளது தெரிய வந்தது. மேலும், சூதட்டத்தில் ஈடுபட்டதாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த இன்சூரன்ஸ் அதிகாரி கோநி கிருஷ்ணன், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த உணவக உரிமையாளர் சித்தார்த், சாஸ்திரி நகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஆனந்த், குரோம்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்த கிஷோர், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் உணவக உரிமையாளர் பட்டேல், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வசந்த் (ஷ்யாம் வீட்டு வேலைக்காரர்), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மணி ( ஷாம் வீட்டு வேலைக்காரர்), பெரியமேட்டைச் சேர்ந்த வீட்டு துப்புரவு பணியாளர் பக்ரூபா, அடையாறு பகுதியைச் சேர்ந்த ஏற்றுமதி தொழில் அதிபர் நசீர், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜூஸ் கடை உரிமையாளர் பாலாஜி, அண்ணாநகரைச் சேர்ந்த என்ஜினியர் சைமன், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன தொழிலதிபர் கவுசிக் ஆகிய அனைவரும் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் ஆடியது தெரியவந்தது.

சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டமாடிய பிரபலங்கள்.. வசமாக சிக்கிய நடிகர் ஷாம்!

அவர்களிடம் இருந்து பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யபட்டது. இதைத் தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் என பலர் இது போன்று சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே காவல்துறைக்கு இந்த சட்டவிரோத சூதாட்டம் குறித்த தகவல் தெரிந்தும், போலீசார் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டும் உள்ளது.

இதனையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களின் மீது சட்ட விரோதமாக சூதாட்டம் ஆடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பின்னர் அனைவரும் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories