தமிழ்நாடு

74வது சுதந்திர தின கொண்டாட்டம் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை!

74வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 74வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மேலும், அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்த கொடியேற்று விழாவில் முதன்மைச் செயலாளர் கே.என் நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன், தி.மு.க கொறடா சக்கரபாணி, தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியன், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, வழக்கறிஞர் அணி செயலாளர் கிரிராஜன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், இளைஞரணி ராஜா அன்பழகன், மாவட்ட செயலாளர் சுதர்சனம், மதுரை மூர்த்தி மற்றும் பகுதி செயலாளர்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

74வது சுதந்திர தின கொண்டாட்டம் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை!

முன்னதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய சுதந்திர தின உரைக்கு ஏற்றாற் போல், கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரங்களில் எல்லாம், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்குமான “தியாகிகள் பென்ஷன்” உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து - அவற்றைச் செயல்படுத்தியும் காட்டியவர்.

ஆகவே இந்தச் சுதந்திர தினத்தில், “சாதி, மத, இன வேறுபாடுகளை” அறவே தூக்கியெறிந்து - “சகோதரத்துவம், சமத்துவம்” என்ற பாச உணர்வோடு அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக - அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் - நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உள்ள உறுதியுடன் சபதம் ஏற்போம்!” எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories