தமிழ்நாடு

தி.மு.க ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கட்டிட கல்வெட்டை அகற்றி புதிய பெயர்சூட்ட முயற்சி - திட்டம் முறியடிப்பு!

தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தின் கல்வெட்டை அகற்றிவிட்டு புதிதாக வேறு பெயர் சூட்ட முயற்சித்த அ.தி.மு.க-வினரால் புதுக்கோட்டையில் பரபரப்பு.

File image
File image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க ஆட்சிக் காலத்தின்போது கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் கட்டிடம் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு அப்போதைய தமிழக துணை முதல்வர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டு அதே கட்டிடத்தில் கல்வெட்டும் வைக்கப்பட்டது.

தி.மு.க ஆட்சியில் வைக்கப்பட்ட கல்வெட்டை நேற்று அகற்றிவிட்டு, 108 ஆம்புலன்ஸ் கட்டிடம் என்று புதிய பெயர் சூட்டி திறப்பு விழா காணும் நோக்கத்தில் அ.தி.மு.க-வினரும், அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர்.

கல்வெட்டு அகற்றப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

அந்தப் புகாரில் அந்தக் கல்வெட்டை உடனடியாக அதே இடத்தில் வைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பாக கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

தற்போது அகற்றப்பட்ட கல்வெட்டு அதே கட்டிடத்தில் முன்பகுதியில் மீண்டும் பதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, "யாரோ பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் வேலையை விட்டுவிட்டு மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுங்கள் என புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் சாடியுள்ளார்.

தி.மு.க ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கட்டிட கல்வெட்டை அகற்றி புதிய பெயர்சூட்ட முயற்சி - திட்டம் முறியடிப்பு!

கொரோனா காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மக்கள் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் மக்களை காப்பாற்ற வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சரும் அதிகாரிகளும் "யாரோ பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் வேலையை விட்டுவிட்டு மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுங்கள் என புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories