தமிழ்நாடு

ஒருபுறம் அச்சமூட்டும் பலி... மறுபுறம் ஆறுதல் தரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை : தமிழகத்தின் இன்றைய CovidUpdate

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 118 பேர் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒருபுறம் அச்சமூட்டும் பலி... மறுபுறம் ஆறுதல் தரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை : தமிழகத்தின் இன்றைய CovidUpdate
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று மேலும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதிதாக 65 ஆயிரத்து 490 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தமிழகத்திலேயே இருந்த 5,814 பேருக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 8,649 ஆக அதிகரித்து. இன்று அதிகபட்சமாக சென்னையில் 986 பேருக்கும் இதர மாவட்டங்களில் 4,848 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் அச்சமூட்டும் பலி... மறுபுறம் ஆறுதல் தரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை : தமிழகத்தின் இன்றைய CovidUpdate

அதில், அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 388 பேருக்கும், திருவள்ளூரில் 362, ராணிப்பேட்டையில் 333, காஞ்சியில் 330, கோவையில் 324, தேனியில் 297, கடலூரில் 281, சேலத்தில் 205 பேருக்கும் இன்று வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுவரையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 5,812 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் 118 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதனையடுத்து மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,159 ஆக அதிகரித்துள்ளது.

ஒருபுறம் அச்சமூட்டும் பலி... மறுபுறம் ஆறுதல் தரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை : தமிழகத்தின் இன்றைய CovidUpdate

அதேசமயத்தில், மேலும் ஆறாயிரத்து 5 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து இதுகாறும் 2.50 லட்சத்து 680 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தற்போது 52 ஆயிரத்து 810 பேருக்கு மருத்துவமனையிலும் வீடுகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories