தமிழ்நாடு

திருமங்கலம் அருகே பட்டப்பகலில் பெண் எரித்துக் கொலை? - போலிஸார் விசாரணை!

குண்டாற்று ஓடைப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டுள்ள போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம் அருகே பட்டப்பகலில் பெண் எரித்துக் கொலை? - போலிஸார் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.டி.ராஜன் தெரு அருகே உள்ள குண்டாறு ஆற்றுப்பகுதியில் மர்மமான முறையில் சடலம் எரிக்கப்பட்டுக் கிடப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

குண்டாறு காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத முக்கால்வாசி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. எரிக்கப்பட்ட பெண் யார் எனவும், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடலை ஆய்வு செய்ததில் இறந்த பெண் 60 வயது மதிக்கத்தக்கவர் எனத் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories