தமிழ்நாடு

போலிஸால் அடித்து கிழிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் புட்டங்கள் : ‘நக்கீரன்’ வீடியோ ஆதாரம்!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடல்கூறு ஆய்வின் போது எடுத்த வீடியோவை நக்கீரன் வெளியிட்டுள்ளது.

போலிஸால் அடித்து கிழிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் புட்டங்கள் : ‘நக்கீரன்’ வீடியோ ஆதாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலிஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் சிறையிலேயே, அவர்கள் இருவரையும் கொடூரமான முறையில் சித்திரவதைகள் செய்து அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அராஜக போலிஸாரின் இந்தக் கொடூரச் செயல் மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

எதிர்க்கட்சியான தி.மு.க, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும் என அரசை வலியுறுத்தி வருவதோடு, சட்டரீதியாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு துணை நிற்கும் என அறிவித்துள்ளது. சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையைக் கண்டித்தும், இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சமூக வலைதளங்களில் குரல்கள் வலுத்துவந்தனர்.

போலிஸால் அடித்து கிழிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் புட்டங்கள் : ‘நக்கீரன்’ வீடியோ ஆதாரம்!

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சாத்தான்குளம் கொலை தொடர்பான இன்றைய விசாரணையின் போது கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு நேரடியாகச் சென்று அவர் விசாரணை மேற்கொண்ட போது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் அறிக்கையாக தாக்கல் செய்திருந்தார்.

அந்த அறிக்கையிலேயே, உடல்பலத்தைக் காட்டி மிரட்டும் தொனியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் இருந்தார் என்றும் நேரடி சாட்சியமாக இருந்த தலைமை காவலர் ரேவதி, சம்பவம் நடந்த அன்று இருவரையும் விடிய விடிய காவலர்கள் லத்தியால் அடித்ததால் லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கறைகள் படிந்துள்ளது என்றார்.

அதுமட்டுமல்லாது, சம்பவம் நடைபெற்ற அன்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் வெண்ணிலா என்பவர்தான் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடலை பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும் இருவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் போலிஸார் அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், ‘இருவருக்கும் எந்த பாதிப்பு இல்லை’ என எழுதிக்கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு மருத்துவர் வெண்ணிலா சம்மதிக்காத நிலையில் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் மூச்சு தினறல் காரணமாகவும், ஏற்கனவே இருந்த உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் வழக்கம் போல் தங்கள் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது தமிழகத்தை ஆட்சி செய்யும் எடப்பாடி அரசு. இந்நிலையில் அரசு சொன்ன காரணம் அப்பட்டமான பொய் என அடுத்தடுத்து வெளிவந்த ஆதராங்கள் கூறினர்.

இந்நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடல்கூறு ஆய்வின் போது எடுத்த வீடியோவை நக்கீரன் வெளியிட்டுள்ளது. அதில், மிருகத்தனமான தாக்குதலை விட கொடூரமான முறையில் இருவரின் புட்டங்களை அடித்து சதை, தோல் என கிழித்தெரியப்பட்டுள்ளது. பின்பகுதியில் சதைபகுதியே இல்லாமல் இருந்துள்ளது.

குறிப்பாக ஜெயராஜ் முகத்தின் ரத்தக்காயங்கள் இருந்துள்ளது. உடல்கூறு ஆய்வின் போது உடன் இருந்த ஜெயராஜ்மருமகன்கள் அழுது துடிக்கும் காட்சிகள் வீடியோ பார்ப்போரை கலங்கச் செய்துள்ளது. அந்த அளவுக்கு மோசமான சித்தரவதைகளை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அனுபவித்துள்ளனர். இது கைது செய்யப்பட்டு சாதாரணமாக அடித்துக்கொள்ளப்பட்டது அல்ல; கொடூரத்தின் கொடூரம் என நக்கீரன் ஆசிரியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலை வழக்கி எந்த தடைவந்தாலும் இரண்டு பேருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories