தமிழ்நாடு

“தங்களை கொடூரமாக தாக்கியதாக கண்ணீர் வடித்தார்”: பென்னிக்ஸ், ஜெயராஜுடன் சிறையில் இருந்த கைதி வாக்குமூலம்!

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“தங்களை கொடூரமாக தாக்கியதாக கண்ணீர் வடித்தார்”: பென்னிக்ஸ், ஜெயராஜுடன் சிறையில் இருந்த கைதி வாக்குமூலம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற முகாந்தரத்திற்கு வலுவான வாக்குமூலமும் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருக்கும் ரகு கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜாசிங் என்பவரை இரு உதவி ஆய்வாளர்களும் கொடூரமாக தாக்கியதாக தான் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாசிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ராஜா சிங் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தன்னை கடுமையாக தாக்கியதாக ராஜசிங் குற்றம் சாட்டியுள்ளார்.

“தங்களை கொடூரமாக தாக்கியதாக கண்ணீர் வடித்தார்”: பென்னிக்ஸ், ஜெயராஜுடன் சிறையில் இருந்த கைதி வாக்குமூலம்!

ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கைதி ராஜாசிங். அதே சமயத்தில் ஜெயராஜும், பெனிக்ஸ்-ம் அங்கு அடைக்கப்பட்டனர். அப்போது ஜெயராஜ் அங்கிருந்த கைதி ராஜா சிங்கிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துக் கூறியுள்ளார்.

அதாவது உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அப்போது பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் உடன் இருந்ததாகவும் ஜெயராஜ் ராஜசிங் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பலத்த காயத்துடன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மிகவும் மோசமான நிலையில் சிறையில் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்த பின்னரே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது கோவில்பட்டி சிறைக் கைதி ராஜா சிங் அளித்த வாக்குமூலம்.

“தங்களை கொடூரமாக தாக்கியதாக கண்ணீர் வடித்தார்”: பென்னிக்ஸ், ஜெயராஜுடன் சிறையில் இருந்த கைதி வாக்குமூலம்!

இதன் மூலம் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியதற்கு கூடுதலாக ஒரு சாட்சியும் சேர்ந்துள்ளது. பலத்த காயங்களுடன் மோசமான நிலையில் இருந்த அவர்களை, சிறையில் அடைப்பதற்கு முன் மருத்துவர்கள் உரிய முறையில் பரிசோதிக்காமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரமும் வலுத்துள்ளது. இதனையடுத்து பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் அமைப்பு செயல்பட தமிழக அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories