தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இரண்டு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ-க்கு மாறிவிட்ட நிலையில் அந்த விசாரணைக் குழுவில் உள்ள 5 சி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில் இவ்வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு காவலர்களையும் மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதற்கு முன்பாக இந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories