தமிழ்நாடு

“அரசு மருத்துவமனையில் முறையான உணவு, தண்ணீர் வழங்குவதில்லை” : கொரோனா நோயாளிகள் புகார்!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு குடிநீர் வழங்குவதாக கொரோனா நோயாளிகள் புகார் அளித்துள்ளனர்.

“அரசு மருத்துவமனையில் முறையான உணவு, தண்ணீர் வழங்குவதில்லை” : கொரோனா நோயாளிகள் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு குடிநீர் வழங்குவதாக கொரோனா நோயாளிகள் புகார் தெரிவித்து கொரோனா நோயாளிகள் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 4287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் இதுவரை 2181 பேர் வீடு திரும்பினர். 2072 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளான தங்களுக்கு தரமற்ற குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும் சுகாதாரமற்ற நிலையில் வார்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்து வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனுக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரியவித்துள்ளனார்.

banner

Related Stories

Related Stories