Corona Virus

ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா... சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 4,058 பேருக்கு பாதிப்பு! #Corona

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. 58 ஆயிரத்து 475 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஐந்தாயிரத்து 849 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 74 பேர் நீங்கலாக தமிழகத்திலேயே இருந்த 5 ஆயிரத்து 775 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது.

வழக்கம்போல் சென்னையில் அதிகபட்சமாக 1,171 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மட்டுமே இன்று 4,058 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா... சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 4,058 பேருக்கு பாதிப்பு! #Corona

அதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 430, ராணிப்பேட்டையில் 414, விருதுநகரில் 363, தூத்துக்குடியில் 357, காஞ்சிபுரத்தில் 325, செங்கல்பட்டில் 223, திருச்சியில் 213, திருவண்ணாமலையில் 210, மதுரையில் 197 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை, குமரி, தஞ்சை, தேனி, நெல்லை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 74 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். அதில், சென்னையில் 21 பேர், கடலூரில் 8, மதுரையில் 7, விருதுநகரில் 6, திருவள்ளூரில் 5, திருவண்ணாமலை, வேலூரில் தலா 4, காஞ்சியில் 3, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும், ராமநாதபுரம், கரூரில் தலா ஒருவர் என 74 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா... சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 4,058 பேருக்கு பாதிப்பு! #Corona

அதில், 6 பேருக்கு கொரோனாவை தவிர எவ்வித இணை நோய்க் குறைபாடும் இருக்கவில்லை. உயிரிழந்தவர்களில் 50 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 24 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்களாவர். ஆகவே இதுவரையில் தமிழகத்தில் 2,700 பேர் கொரோனா காரணாமக உயிரிழந்திருக்கிறார்கள்.

இன்று மட்டுமே 4 ஆயிரத்து 910 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதன்படி மொத்தமாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே தற்போது 51 ஆயிரத்து 765 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories