தமிழ்நாடு

“நான் பீதி கிளப்புவதாகச் சொன்னீர்களே... இப்போது நிலை என்ன?” - அமைச்சருக்கு சு.வெங்கடேசன் பதிலடி!

எங்களின் நோக்கம் பீதியைக் கிளப்புவது அன்று; வருமுன் காக்க நடவடிக்கை எடுக்க வைப்பதும் உண்மையான நிலைமையை எப்படியாவது உங்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதுதான் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

“நான் பீதி கிளப்புவதாகச் சொன்னீர்களே... இப்போது நிலை என்ன?” - அமைச்சருக்கு சு.வெங்கடேசன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தாண்டி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக சென்னை உருமாறியிருக்கும் நிலையில், அதற்கு அடுத்த இடத்தை மதுரை தற்போது தொட்டிருக்கிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 8,357 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,459 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகவும், தடுப்பு நடவடிக்கை எடுக்ககோரியும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், சு.வெங்கடேசன் மக்களிடையே பதற்றத்தை உண்டாக்குகிறார் என அ.தி.மு.க அமைச்சர் குற்றம்சாட்டினார்.

“நான் பீதி கிளப்புவதாகச் சொன்னீர்களே... இப்போது நிலை என்ன?” - அமைச்சருக்கு சு.வெங்கடேசன் பதிலடி!

இந்நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “ஜூன் 26 ஆம் தேதி சில புள்ளிவிபரங்களின் அடிப்படையில் “மதுரைக்கு முதல்வர் உடனடியாக உதவ வேண்டும்” என்ற அறிக்கையொன்றினை வெளியிட்டேன்.

அதற்கு மறுநாள் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ”எம்.பி., முதல்வருக்குக் கடிதம் எழுதுவதாகச் சொல்லி, தேவையில்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்புகிறார்” என்று கூறினார்.

அன்றைய அறிக்கையில், “மதுரையில் தொற்று பரவும் வேகம் 7.9% ஆக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் ஜூலை 21 ஆம் தேதி மதுரையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,883 ஆக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தேன். இதனைத்தான் அமைச்சர் பீதியை கிளப்புவதாகச் சொன்னார். ஆனால், இன்று (ஜூலை 21) மதுரையில் 8,517 தொற்றாளர்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

பீதியை விஞ்சி நிற்கிறது உண்மை.

அமைச்சரும் அரசும் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களின் நோக்கம் பீதியைக் கிளப்புவது அன்று; வருமுன் காக்க நடவடிக்கை எடுக்க வைப்பதும் உண்மையான நிலைமையை எப்படியாவது உங்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதுதான். அதற்குத்தான் தொடர்ந்து முயல்கிறோம், முயல்கிறோம் முயன்றுகொண்டே இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories