தமிழ்நாடு

“ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு; கலால் வரி, சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்” : வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை!

வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன இன்ஷூரன்ஸ் உள்ளிட்டவைகளை தமிழக அரசு ஆறு மாத காலம் தள்ளி வைக்க வேண்டும் கால்டாக்சி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோப்பு படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்களின் கலால் வரி, சாலை வரி ரத்து செய்ய வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன இன்ஷூரன்ஸ் உள்ளிட்டவைகளை தமிழக அரசு ஆறு மாத காலம் தள்ளி வைக்க வேண்டும் என 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சென்னை சேப்பாகத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பாதிப்பால் கடந்த 3 மாதங்களாக சாலைகளில் வாகனங்களை இயக்க தமிழக அரசு தடை விதித்ததால் 70 நாட்களாக ஓட்டுநர்கள் வருமானம் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டிருக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு எந்த ஒரு நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை.

தற்போது பெட்ரோல் டீசல் விதிக்கப்பட்டுள்ளதால் மதிப்பு கூட்டு வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆறு மாதங்களாக வாகனங்கள் இயங்கவில்லை, அதனால் உடனடியாக சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.

வாகன இன்சூரன்ஸ் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் ஆகியவைகளை 6 மாத காலம் தள்ளிவைக்க வேண்டும் என 8 கோரிக்கை வலியுறுத்தி அனைத்து வாகன ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் சென்னை சேப்பாக்கத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தில் ஈடுப்பட்டனர்

banner

Related Stories

Related Stories