தமிழ்நாடு

“தேர்தலில் தி.மு.க வெற்றியை தெரிந்து கொண்டு மதகலவரங்களை தூண்டி விடுகின்றனர்” : முத்தரசன் குற்றச்சாட்டு!

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் தலைவர்களை மிக மோசமாக விமரசித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளனர்.

“தேர்தலில் தி.மு.க வெற்றியை தெரிந்து கொண்டு மதகலவரங்களை தூண்டி விடுகின்றனர்” : முத்தரசன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்பதை அறிந்து மதகலவரங்களை பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட மதவாத சக்திகள் தூண்டி விடுகின்கிறனர் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார்.

மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பற்றி தவறான கருத்துக்களை பரப்பிவரும் நபர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக துணை தலைவர் கலி. பூங்குன்றன் , விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னியரசு காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம் புதுவை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பாலன் இல்லம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் விபசார விடுதி என்று இந்த இடம் பற்றி கூறியிருக்கிறார்கள் கடந்த 17ம் தேதி மாநகர போலிஸ் ஆணையரிடம் கடிதம் கொடுத்து உள்ளோம்.

மூத்த கம்யூனிஸ்ட் தோழர்களான நல்லகண்ணு அவர்களை தாமிரபரணி மணல் கொள்ளையர் என்று செய்தி வெளியிட்டுள்ளனர். 20 ம் தேதி இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தோழர் சங்கரய்யா மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர்.

“தேர்தலில் தி.மு.க வெற்றியை தெரிந்து கொண்டு மதகலவரங்களை தூண்டி விடுகின்றனர்” : முத்தரசன் குற்றச்சாட்டு!

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் தலைவர்களை மிக மோசமாக விமரசித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசின் அடிமையரசாக மாநில அரசு இருப்பதால் இதுபோன்ற அனாகரீகமாக செயல்பட்டு வருகின்றனர்.

எதிரிகளின் தீர்மானிக்கும் ஆயுதத்தை எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மகத்தான வெற்றி பெறும் என்ற தகவலறிந்து இது போன்ற மதகலவரங்களை தூண்டிவிடும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories