தமிழ்நாடு

“அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை” - தமிழக வானிலை நிலவரம்!

ஜூலை 7ம் தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

“அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை” - தமிழக வானிலை நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல, அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை” - தமிழக வானிலை நிலவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் ஏற்காடு, கோவையில் வால்பாறை, சின்கோனா ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழையும், கோவை சின்னக்கல்லாரில் 4 செ.மீ, நீலகிரி நடுவட்டம், தர்மபுரி பென்னாகரத்தில் தலா 3 செ.மீ, சேலம், அரியலூர் ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கியில் தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

மீனவர்களுக்கான முன்னறிவிப்பு

ஜூலை 3 முதல் 5ம் தேதி வரை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் இன்றும் (ஜூலை 3) சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

“அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை” - தமிழக வானிலை நிலவரம்!

அதேபோல ஜூலை 7 வரையில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும்.

ஜூலை 6 வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories