தமிழ்நாடு

“ஜெயராஜ், பென்னிக்ஸ் அமர்ந்திருந்த போர்வை முழுக்க ரத்தம்” - கார் ஓட்டுநர் அதிர்ச்சி வாக்குமூலம்!

சாத்தான்குளத்தில் இருந்து கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் அழைத்துச் சென்ற தனியார் கார் ஓட்டுநர், அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

“ஜெயராஜ், பென்னிக்ஸ் அமர்ந்திருந்த போர்வை முழுக்க ரத்தம்” - கார் ஓட்டுநர் அதிர்ச்சி வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் இருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் தங்களுக்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும் இறந்தவர்கள் உடலில் கடுமையான காயங்கள் இருந்தது இதிலிருந்து தெரிவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

“ஜெயராஜ், பென்னிக்ஸ் அமர்ந்திருந்த போர்வை முழுக்க ரத்தம்” - கார் ஓட்டுநர் அதிர்ச்சி வாக்குமூலம்!

கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணைக்கு சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லையென குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் ரேவதி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் மீதான தாக்குதல் குறித்து மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்துள்ள நிலையில், மேலும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளத்தில் இருந்து கோவில்பட்டி சிறைக்கு போலிஸாரின் அழைப்பை ஏற்று ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் அழைத்துச் சென்ற தனியார் கார் ஓட்டுநர், தனியார் தொலைக்காட்சிக்கு தகவல் அளித்துள்ளார்.

“ஜெயராஜ், பென்னிக்ஸ் அமர்ந்திருந்த போர்வை முழுக்க ரத்தம்” - கார் ஓட்டுநர் அதிர்ச்சி வாக்குமூலம்!

அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை அழைத்துச் செல்லும்போது காரில் ரத்தம் கசிந்திருந்தது என்றும், அவர்கள் ஒரு போர்வை மீது அமர வைக்கப்பட்டதாகவும், கோவில்பட்டி சென்று சேரும்போது போர்வை ரத்தத்தால் நனைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இருவருமே கெந்திக் கெந்தி நடந்ததாகவும், அவர்களால் சரியாக நடக்க முடியவில்லை எனவும் அந்த கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். போலிஸாரும், அரசும் திட்டமிட்டு கொலையை மறைக்கும் வேளையில், இதுபோன்ற தகவல் வெளியாவது அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories