தமிழ்நாடு

தி.மு.க வேட்பாளரின் வெற்றியை தோல்வி என அறிவித்த அதிகாரிகள் : உள்ளாட்சி தேர்தல் மோசடி RTI மூலம் அம்பலம்!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எனது வெற்றியை மறைத்திருக்கிறார்கள் என தி.மு.க. வேட்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தி.மு.க வேட்பாளரின் வெற்றியை  தோல்வி என அறிவித்த அதிகாரிகள் : உள்ளாட்சி தேர்தல் மோசடி RTI மூலம் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி மாதம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களே பெருமளவு பகுதிகளில் வெற்றிக்கனியை எட்டினர்.

இருப்பினும், ஒருசில பகுதிகளில் ஆளுங்கட்சி மற்றும் தேர்தல் அதிகாரிகளின் செயல்களாலும் தி.மு.கவினரின் வெற்றிகள் பறிக்கப்பட்டு, மாற்றி அறிவிக்கப்பட்ட முறைகேடுகள் நடந்தன.

அவ்வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் கீர்ப்பாளையம் ஒன்றியத்தில் தி.மு.க வேட்பாளரின் வெற்றியை மறைத்து அ.ம.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது.

தி.மு.க வேட்பாளரின் வெற்றியை  தோல்வி என அறிவித்த அதிகாரிகள் : உள்ளாட்சி தேர்தல் மோசடி RTI மூலம் அம்பலம்!

அதன்படி, கிளியனூரைச் சேர்ந்த காஞ்சனா என்பவரின் ஆர்.டி.ஐ. கேள்விகளின் மூலம் கீரப்பாளையம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. மகளிரணி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் ஒன்றிய சேர்மனுமான வேட்பாளர் அமுதராணி வெற்றிபெற்றது தெரியவந்துள்ளது.

ஆயிரத்து 172 வாக்குகள் பெற்ற அமுதராணியை விட 1,066 வாக்குகளே பெற்ற அ.ம.மு.கவைச் சேர்ந்த கவிதா என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள தி.மு.க-வின் அமுதராணி, “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எனது வெற்றியை மாற்றி அறிவித்திருக்கிறார்கள். இந்த மோசடியை நடத்தியவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும். உண்மையான வெற்றி வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும்” என்றுதமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சுப்பிரமணியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories