தமிழ்நாடு

அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னையில் லேசான மழை பெய்யும் - வானிலை அப்டேட்!

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என வானிலை மையம் தகவலளித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னையில் லேசான மழை பெய்யும் - வானிலை அப்டேட்!

இந்த இரண்டு நாட்களில் ஜூன் 28ம் தேதியன்று சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஜூன் 29ம் தேதி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 3 செ.மீ மழையும்., திருச்சி மாவட்டம் கோவில்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, பொன்னமராவதி மற்றும் காரையூர், அரியலூர் மாவட்டம் திருமனூர், கன்னியாகுமரி மாவட்டம் சித்தார், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னையில் லேசான மழை பெய்யும் - வானிலை அப்டேட்!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியஸும் பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories