தமிழ்நாடு

இன்று மட்டும் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு... 39 பலி - நாள்தோறும் அதிகரிக்கும் தொற்று - அரசு மெத்தனம்!?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 38 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 44,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 23,148 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 9,44,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று கொரோனா பாதிப்பு காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 28 பேர் அரசு மருத்துவமனையிலும், 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் 28,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories