தமிழ்நாடு

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து  வருகிறது? - மதுரை ஐகோர்ட் கேள்வி!

மருத்துவ காப்பீடு தொகையாக 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் போது, புதிய சித்த மருந்துகளை பரிசோதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என மதுரை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து  வருகிறது? - மதுரை ஐகோர்ட் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் கொண்டு கசாய பொடி மருந்தை கண்டுபிடித்துள்ளேன்.

இந்த பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கொரோனா நோயிலிருந்து விடுபடலாம்.இந்த மருந்தால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியன சரிபங்கில் இருக்க செய்யும். அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த மருந்துக்கு உள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து  வருகிறது? - மதுரை ஐகோர்ட் கேள்வி!

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே உதவியது. எனவே பொடி மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே கொரோனா நோயை குணப்படுத்தும் சித்த மருந்தான மூலிகை பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் மக்கள் மிகவும் பாதித்து, உயிரிழந்து வருகிறார்கள்.

கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் எதன் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டது, மேலும் கபசுர குடிநீர் கொரோனா தொற்றுக்கு கொடுக்கலாம் என ஆய்வு செய்யபட்டதா நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?

மருத்துவ காப்பீடு தொகையாக 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் போது, இது போன்ற புதிய மருந்துகளை பரிசோதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்? ஆங்கில மருத்துவ வியாபார யுக்தி மற்றும் லாப நோக்கு இயற்கை மருத்துவத்தை அழித்துவிடுமோ என அச்சம் உள்ளது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளை (ஜூன் 23) ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories