தமிழ்நாடு

“50 லட்ச பேரில் 22,872 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை போதுமா? கோவையின் அவலநிலை குறித்து எம்எல்ஏ கேள்வி

'கொரோனாவே இல்லை' என்ற தோற்றத்தை சில நாட்களாக உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள், பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளார்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

“50 லட்ச பேரில் 22,872 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை போதுமா? கோவையின் அவலநிலை குறித்து எம்எல்ஏ கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுமார் 50,00,000 மக்கள் வசிக்கும் கோவை மாவட்டத்தில், ஜூன் 7-ம் தேதிவரை, 22,872 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் இல்லை என கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடார்பாக நா.கார்த்திக் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும், மற்றவர்களுக்கு நோய்ப் பரப்பாத வகையில் அவர்களைத் தனிமைப்படுத்துவதும்தான் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி. ஆனால், கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவையில் போதுமான அளவில் பரிசோதனைகள் நடைபெறவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று துவக்கத்திலிருந்து, பரிசோதனை மற்றும் இறப்பு குறித்து அரசு தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தி.மு.க. உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பிறகே- ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு, மாவட்டவாரியாக பரிசோதனைக் குறித்து ஒருநாள் மட்டும் தகவல் வெளியிட்டார்கள். பின்பு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதன்படி, தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தகவல்கள் அடிப்படையில், கோவையில் ஜூன் 7-ம் தேதி வரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 22,872 ஆகும்.

“50 லட்ச பேரில் 22,872 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை போதுமா? கோவையின் அவலநிலை குறித்து எம்எல்ஏ கேள்வி

சுமார் 50,00,000 மக்கள் வசிக்கும் இந்த கோவை மாவட்டத்தில், இதுவரை 22,872 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் இல்லை.

தேசிய அளவில், ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கு 539 பரிசோதனைகள் என்ற சராசரியான கணக்கில் பரிசோதனைகள் செய்யப்பட்ட நேரத்தில், சுமார் 50,00,000 மக்கள்தொகை கொண்ட கோவையில், தினமும் குறைந்தது 1,500 பேர் முதல் 2,000 பேர் வரை பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால், இப்போது கோவை மாவட்டத்தில் தினமும் 50 முதல் 100 பரிசோதனைகள்கூட செய்யப்படவில்லை என்று தகவல் வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், கோவையில் பாதிப்பு மோசமாக இருக்கும்.

கோவையில் பரிசோதனைகளைக் குறைத்து, நோய்த் தொற்று குறைகிறது அல்லது நோய்த் தொற்றே இல்லை என்று போலியாக காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?, பரிசோதனைகள் செய்யாமல் கொரோனா நோய்ப் பரவல் இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போல ஆகும்!

“50 லட்ச பேரில் 22,872 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை போதுமா? கோவையின் அவலநிலை குறித்து எம்எல்ஏ கேள்வி

கொரோனாவை பொறுத்தவரை ஆபத்தை மறைக்க மறைக்க, அதுபேராபத்தாக மாறும். கோவையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம்.

'கொரோனாவே இல்லை' என்ற தோற்றத்தை சில நாட்களாக உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள், பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளார்கள் . உரிய காலத்தில் வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்து, வகைப்படுத்துவதை உறுதி செய்துவிட்டால், லேசான தொற்று பாதிப்புகளுக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறச் செய்யலாம்.

விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பரிசோதனைகளின் போது நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்று ஊருக்குச் சென்றவர்கள், தொற்று பரவி அதை தங்களுடைய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குக் கொண்டு சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.

எதிர்பாராமல் தீவிரமாக வைரஸ் பரவினால், இப்போதுள்ள மருத்துவமனைகளில், திடீரென நோயாளிகள் வருகை அதிகரிப்பு காரணமாக, கூட்டம் அதிகரிக்கலாம். போதிய அளவுக்கு முகக்கவசங்கள், கையுறைகள், கவுன்கள், மருந்துகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா? என்பது தமிழக அரசு சார்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

“50 லட்ச பேரில் 22,872 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை போதுமா? கோவையின் அவலநிலை குறித்து எம்எல்ஏ கேள்வி

கோவை மாவட்ட நிர்வாகம் விரைவாக செயல்பட்டு, திட்டத்தை உருவாக்கி, மக்களுக்கு புள்ளிவிவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தி, தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த - 24 மணிநேர உதவி எண் ஏற்படுத்தி, இதுபற்றிய நிலவரம் குறித்து மக்கள் அதிக தகவல்கள் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும்.

அதிகளவில் பரிசோதனை செய்வதே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒரு முக்கிய வழி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ''அனைத்து நாடுகளுக்கும் ஒரு முக்கியச் செய்தி, பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை செய்யுங்கள்'' என மார்ச் மாத தொடக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்திருந்தார்.

ஆகவே இனிவரும் காலங்களிலாவது, கோவையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை பரவலாக்கி, அதிகப்படுத்த வேண்டும் என்றும் இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக் கட்டுப்படுத்துதல் விஷயத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories