அரசியல்

“தாழ்வழுத்த மின்நுகர்வோரின் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்”: தி.மு.க எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு, மார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

“தாழ்வழுத்த மின்நுகர்வோரின் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்”: தி.மு.க எம்.எல்.ஏ வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கோவையில் உள்ள தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்களின் மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நா.கார்த்திக் எம்.எல்.ஏ வெளியிடுள்ள அறிக்கையில், “கோவையில் பல்லாயிரக் கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளது. ஏற்கனவே நலிவடைந்து, சிரமப்படுகிற, கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்தும், ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் முழுமையாக செயல்படவில்லை. இதனால், எந்த வித உற்பத்தி மற்றும் வருமானம் இன்றி, தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 3 அன்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (மின்சார வாரியம்) சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை, அதற்கான தாமத (அபராதம்) கட்டணம் இன்றி செலுத்துவதற்கு ஜூன் 15 வரை கால நீட்டிப்பு செய்தும் , ஜூன் 15-க்கு பிறகு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது” என்று அறிவித்தது.

“தாழ்வழுத்த மின்நுகர்வோரின் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்”: தி.மு.க எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

மார்ச், ஏப்ரல் , மே மாதங்களில் நிறுவனங்கள் முழுமையாக செயல்படாமல் இருந்ததால் , இந்த மூன்று மாதங்களுக்கான மின் கட்டணமாக மிகப் பெரிய தொகையை, ஜூன் 15 ம் தேதிக்குள் செலுத்த முடியாத நிலையில் தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளனர்.

நேற்றுடன் காலக்கெடு முடிந்த நிலையில் இன்னும் மூன்று நாட்களில் நிலுவையில் உள்ள மொத்த மின் கட்டண தொகையையும் அபராதத்துடன் கட்ட வேண்டும் எனவும் , இல்லாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த மாதத்திலிருந்துதான் தொழிற்சாலைகள் இயக்கத்திற்கு வந்துள்ள நிலையில் ,மின் கட்டணம் செலுத்தாததால் , மின் இணைப்பு துண்டிப்பு என்றால், மீண்டும் தொழிற்சாலைகள் முடங்கி, இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமே சிதைந்து கேள்விக்குறியாகி விடும்.

“தாழ்வழுத்த மின்நுகர்வோரின் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்”: தி.மு.க எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

ஆகவே இந்த பேரிடர் காலத்தில் , தொழிற்சாலைகள் இயங்காததால், பெரும் நிதி நெருக்கடியில் உள்ள கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு, மார்ச், ஏப்ரல் , மே மாதங்களின் மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் , கோவையில் உள்ள இந்த தொழிற்சாலைகளை கடுமையான சரிவிலிருந்து மீட்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன் .

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு தாங்கள் பரிந்துரை செய்யுமாறு மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories