தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
“இன்று ஒரே நாளில் 19,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,48,244 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 61 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இன்றைய பாதிப்பின் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று புதிதாக 919 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டுமே இன்று 40 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 26,782 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 20,706 பேர் சிகிச்சையில் உள்ளனர்.”