தமிழ்நாடு

“சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை மாதத்தில் 1.5 லட்சமாக அதிகரிக்கும்” : எம்.ஜி.ஆர்.பல்கலை. ஆய்வில் தகவல்!

சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை 15ல் 1.5 லட்சமாக அதிகரிக்கும் என எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.

“சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை மாதத்தில் 1.5  லட்சமாக அதிகரிக்கும்” : எம்.ஜி.ஆர்.பல்கலை. ஆய்வில் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் இது 30 ஆயிரத்தைக் கடந்து விடும். இந்த எண்ணிக்கையில் 90 விழுக்காட்டினர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதித்துவந்தாலும் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து க்களிடம் பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்த பின்னர் நோயாளிகளைத் தனிமைப்படுத்த புதிய இடத்தை தேடுகிறார்கள். சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவமனை என கோவிட் 19 தொற்றுக்கான அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளகள் நிரம்பி வழிகின்றனர்.

“சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை மாதத்தில் 1.5  லட்சமாக அதிகரிக்கும்” : எம்.ஜி.ஆர்.பல்கலை. ஆய்வில் தகவல்!

இந்நிலையில், சென்னையில் அடுத்த மாத இறுதிக்குள் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் 1,600 பேர் பலியாவார்கள் என எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது.

இதுதொடர்பாக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகம் மேற்கொண்ட ஆய்வில் கூறியிருப்பதாவது, “சென்னையில் மே 25ம் தேதி 11,119 பாதிப்புகளும் 83 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. கணிப்பின் படியே 11,131 கொரோனா பாதிப்புகளும் 83 இறப்புகளும் அன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேபோல், மே 30ம் தேதி 14,415 கொரோனா பாதிப்புகளும் 119 உயிரிழப்பும் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அந்ததேதியில் சென்னையில் 13,980 பாதிப்புகளும் 119 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. அதுமட்டுல்லாது ஜூன் 3ம் தேதி 17,738 பாதிப்பும், 156 இறப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டதில் 17,598 பாதிப்பும் 153 இறப்புகள் ஏற்பட்டன.

“சென்னையில் கொரோனா பாதிப்பு ஜூலை மாதத்தில் 1.5  லட்சமாக அதிகரிக்கும்” : எம்.ஜி.ஆர்.பல்கலை. ஆய்வில் தகவல்!

இந்த நிலையில், தமிழகத்தில் 27,256 கொரோனா பாதிப்பு மற்றும் 220 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் அடுத்த 10 நாட்களில் அதாவது ஜூன் 15ம் தேதி கொரோனா பாதிப்பு 32,977 ஆகவும், இறப்பு 324 ஆகவும் ஏற்படும் என்றும் அதுவே ஜூன் 30ம் தேதி இந்த பாதிப்பு இருமடங்கு அதிகரித்து 7,1024 கொரோனா பாதிப்பும், 748 உயிரிழப்பும் நிகழலாம் என கூறப்படுகிறது.

அடுத்ததாக ஜூலை 1ம் தேதி சென்னையில் 74,714 பாதிப்புகளும் 790 இறப்புகளும், அதுவே ஜூலை 15ல் 1.5 லட்சமாக அதிகரிக்கும் அதாவது 1,50,244 பேர் கொரோனா பாதிப்புகளும் 1654 ஆக இருக்கம் என கண்காணித்துள்ளன.

மேலும் இந்த ஆய்வில் சென்னை மாநகரில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நோய்த் தொற்று உச்சத்தில் இருக்கும் என்றும் இந்த நிலை அக்டோபர் மாதம் வரை தொடரும் என்று கூறியிருப்பது கவலையளிக்கிறது. அரசு இதுதொடர்பாக பரிசலினை செய்து தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories