தமிழ்நாடு

“வெப்பக்காற்று வீசும் அபாயம் : 3 நாட்களுக்கு வெளியே போகவேண்டாம்” - வட தமிழக மக்களுக்கு வானிலை வார்னிங்!

அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

“வெப்பக்காற்று வீசும் அபாயம் : 3 நாட்களுக்கு வெளியே போகவேண்டாம்” - வட தமிழக மக்களுக்கு வானிலை வார்னிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் கேரளாவை ஒட்டிய பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வட தமிழகத்தில் இன்று முதல் அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்து வெப்பக்காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை பொதுவெளிக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 42 டிகிரி செல்ஸியஸூம், குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்ஸியஸும் பதிவாகும்.

“வெப்பக்காற்று வீசும் அபாயம் : 3 நாட்களுக்கு வெளியே போகவேண்டாம்” - வட தமிழக மக்களுக்கு வானிலை வார்னிங்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories