தமிழ்நாடு

இந்த வாரமே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. அடுத்த 2 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

நடப்பாண்டுக்கான தென் மேற்கு பருவமழை முன்கூட்டிய தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வாரமே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. அடுத்த 2 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று , இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏனைய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வாரமே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. அடுத்த 2 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம் ,தருமபுரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 40-41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். ஆகவே அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் காலை 11:30 முதல் பிற்பகல் 3:30 வரை வெளியில் செல்வதையும் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டாம் புத்தன் அனைப்பகுதியில் 4 செ.மீ மழையும், சுரளக்கோடு பகுதியில் 3 செ.மீ மழையும், இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தண்டதனம், வட்டானம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த வாரமே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. அடுத்த 2 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதியில் இருக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டிய தொடங்கும் தென்மேற்கு பருவமழை:

அந்தமான் பகுதிகளில் வருகின்ற 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும். மேலும் அந்தமானில் வருகின்ற 16ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதக சூழல் நிலவுவதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories