Corona Virus

தீவிரமாக பரவும் கொரொனா.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை.. இதுதான் தடுப்பு நடவடிக்கையா Mr.எடப்பாடி?

சென்னையில் கொரோனா பரவல் தீவிரத்தை அடைந்துள்ள நிலையில், புதிதாக ஊரடங்கில் தளர்வுகளை வழங்கியுள்ளது எடப்பாடி அரசு.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அதிக பட்சமாக சென்னையிலேயே கொரோனா பாதிப்பு தினந்தோறு நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் 4வது இடத்தில் உள்ளது சென்னை.

நேற்று வரை மட்டுமே 3330 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 501 பேர் குணமடந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும், 27 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆகவே, 2,786 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 15 மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிரமாக பரவும் கொரொனா.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை.. இதுதான் தடுப்பு நடவடிக்கையா Mr.எடப்பாடி?

இதன் காரணமாக மாநகராட்சி முழுவதும் சுமா 400க்கும் மேலான பகுதிகள் நோய் கட்டுப்பாடுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், ஊரடங்கு சமயத்தில் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது எடப்பாடி அரசு.

அதன்படி, இன்று வெளியான அறிக்கையில் சலூன், ஸ்பா, பியூட்டி பார்லரை தவிர்த்து மற்ற அனைத்து வகையான தனிக்கடைகள் இயங்கலாம் என அறிவித்து சிலக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

ஏற்கெனவே, டாஸ்மாக் கடைகளை திறந்து கல்லா கட்டியதால் அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து எடப்பாடி அரசுக்கு உத்தரவிட்டது. இதனால், நாளை முதல் டீக்கடை உள்ளிட்ட தனிக்கடைகளை திறக்க அனுமதி அளித்திருப்பது மக்களின் தனிமனித இடைவெளியையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தீவிரமாக பரவும் கொரொனா.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை.. இதுதான் தடுப்பு நடவடிக்கையா Mr.எடப்பாடி?

அதுமட்டுமல்லாமல், வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வரும் சமயத்தில் இவ்வாறு தளர்வுகளை வழங்குவது தமிழகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு கிடைக்கவேண்டிய நிதியை போர்க்கால அடிப்படையில் கேட்டுப் பெற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் நோய் பரவலை முறியடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories