தமிழ்நாடு

“பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி அதிகரிப்பு” - அரசின் நிதிச் சுமையை மக்கள் மீது திணிக்கும் எடப்பாடி..!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான உயர்த்தப்பட்ட மதிப்பு கூட்டு வரி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

“பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி அதிகரிப்பு” - அரசின் நிதிச் சுமையை மக்கள் மீது திணிக்கும் எடப்பாடி..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக குறைந்திருந்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்காமல், அதன் மீதான கலால் வரியை மோடி அரசு சமீபத்தில் உயர்த்தியது.

அதேபோல, தற்போது தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (VAT) அதிமுக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.25ம், டீசலுக்கு ரூ.2.50ம் மதிப்பு கூட்டு வரியாக நிர்ணயித்து விலையை உயர்த்தியுள்ளது.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து தொழில் துறைகளும் முடங்கியுள்ளதால், அதனால் ஏற்படும் இழப்பை இவ்வாறு பெட்ரோல், டீசல் மீதான வரியின் மூலம் ஈட்ட முடிவெடுத்திருக்கிறது எடப்பாடி அரசு.

“பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி அதிகரிப்பு” - அரசின் நிதிச் சுமையை மக்கள் மீது திணிக்கும் எடப்பாடி..!

இந்த வாட் வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதலே தமிழகத்தில் அமல்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது சற்றும், பா.ஜ.க அரசு மேற்கொண்ட முடிவுக்கு குறைவில்லாத வகையில் உள்ளது. ஊரடங்கால் வேலையை இழக்கும் நிலையில் சிக்கி தவித்து வரும் மக்கள் மீது மேலும், மேலும் நிதிச்சுமையை ஏற்றி வருகிறது இந்த அரசு.

மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தால், மாநிலத்துக்கு தேவையான நிதிகளை போர்க்கால அடிப்படையில் கேட்டுப் பெறமுடியும் என வாய்ப்பந்தல் போட்டுவிட்டு, தற்போது மத்திய அரசு நிதி கொடுக்காததால் தன் சொந்த மாநில மக்கள் மீது வரியை சுமத்தியுள்ளது.

மக்களிடையே பெரும் கலக்கத்தையும், எதிர்ப்பையுமே தமிழக அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories