தமிழ்நாடு

கொரோனாவிலிருந்து மீண்ட 74 வயது மூதாட்டி : பழக்கூடை கொடுத்து வழியனுப்பிய சென்னை மருத்துவர்கள்! #Covid19

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 74 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்ட 74 வயது மூதாட்டி : பழக்கூடை கொடுத்து வழியனுப்பிய சென்னை மருத்துவர்கள்! #Covid19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 690 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவால் ஒருவர் உயிழந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் உயிரிழப்பு 8 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று வரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று மேலும் 2 பேர் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கொரோனாவிலிருந்து மீண்ட 74 வயது மூதாட்டி : பழக்கூடை கொடுத்து வழியனுப்பிய சென்னை மருத்துவர்கள்! #Covid19

இன்று வீடு திரும்பிய இரண்டு பேரில் ஓருவர் 74 வயது மூதாட்டியும் ஒருவர். இவர் கடந்த மார்ச் 26ம் தேதி மூச்சுத்திணறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார். குணமடைந்த மூதாட்டிக்கு மருத்துவக் குழுவினர் பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர் என ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories