தமிழ்நாடு

மைதா மாவு என நினைத்து பூச்சி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்ட குடும்பம் : மருமகள் பரிதாப பலி!

அரோக்கோணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மைதா மாவு என நினைந்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்டு பரிதாமாக உயிரிழந்தார்.

மைதா மாவு என நினைத்து பூச்சி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்ட குடும்பம் : மருமகள் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தினமும் ஏதாவது சமைத்துக்கொடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், அரோக்கோணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மைதா மாவு என நினைந்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்டு பரிதாமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்வரின் மருமகள் பாரதி.

இவர் நேற்றைய தினம் அவரது மாமனார் பெரியசாமியிடம் போண்டா செய்வதற்கு மாவு வாங்கிவரும் படி கூறியுள்ளார். அவர் மைதா மாவுடன் தோட்டத்திற்கு தெளிக்க பூச்சுக்கொல்லி மருந்தையும் வாங்கி சென்றுள்ளார். மருமகளிடம் எதுவும் சொல்லாமல் இரண்டையும் ஒரே இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

மைதா மாவு என நினைத்து பூச்சி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்ட குடும்பம் : மருமகள் பரிதாப பலி!

இதுதெரியாமல் இரண்டும் மாவுதான் என நினைத்து ஒன்றாக கலந்து வீட்டில் உள்ளவர்களுக்கு போண்டா செய்துக் கொடுத்துள்ளார் பாரதி. அதனை பாரதியின் கணவர் சுகுமார், மாமியார் லட்சுமி, மாமனார் பெரியசாமி என குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நால்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரக்கோணம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories