தமிழ்நாடு

"தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு” : மாவட்ட வாரியாக எண்ணிக்கையை வெளியிட்ட பீலா ராஜேஷ்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

"தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு” : மாவட்ட வாரியாக எண்ணிக்கையை வெளியிட்ட பீலா ராஜேஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது பாதிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1906 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 124 ஆக இருந்த நிலையில், இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளார் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய அறிவிப்புக்குப் பின்னர் பலரும் தானாக முன்வந்து தங்களைப் பரிசோதித்துக் கொண்டுள்ளனர். தற்போது தொற்று கண்டறியப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இரவு, பகலாக கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் 77,300 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ” எனத் தெரிவித்தார்.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்டம் வாரியாக எண்ணிக்கை :

நெல்லை - 6 கோவை - 28 ஈரோடு - 2 தேனி- 20 திண்டுக்கல் - 17 மதுரை - 9 திருப்பத்தூர் - 7 செங்கல்பட்டு - 7 சிவகங்கை - 5 தூத்துக்குடி - 2 திருவாரூர்- 2 கரூர் - 1 காஞ்சி - 2 சென்னை - 1 திருவண்ணாமலை - 1

banner

Related Stories

Related Stories