தமிழ்நாடு

Corona: “வாடகை கேட்டு தொல்லை தரக் கூடாது; மீறினால் நடவடிக்கை” - வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை!

தமிழக - வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான வாடகை கேட்டு தொல்லை தரக்கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Corona: “வாடகை கேட்டு தொல்லை தரக் கூடாது; மீறினால் நடவடிக்கை” - வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக - வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான வாடகை கேட்டு தொல்லை தரக்கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை மீறி, வீட்டு வாடகை கேட்டு வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் இல்லாமல், முழுத்தொகையை வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தவணைத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள உத்தரவு பின்வருமாறு :

* கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

* வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

* அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் (கூஐஐஊ) கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்த மூன்று மாத கால அவகாசம் (30.6.2020 வரை) வழங்கப்படுகிறது.

* ‘கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதனத் தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்.

Corona: “வாடகை கேட்டு தொல்லை தரக் கூடாது; மீறினால் நடவடிக்கை” - வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை!

* சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

* சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் (30.6.2020 வரை) வழங்கப்படுகிறது.

* மோட்டார் வாகன சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

* மோட்டார் வாகன சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

* எடைகளும், அளவைகளும் சட்டம் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளினால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம், ஆகியவற்றின் கீழ் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

Corona: “வாடகை கேட்டு தொல்லை தரக் கூடாது; மீறினால் நடவடிக்கை” - வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை!

* உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

* தற்போது உள்ள சூழ்நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து வீட்டு உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories