தமிழ்நாடு

"கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் லாரி ஓட்டுநர்களை மீட்கவேண்டும்” - வைகோ கோரிக்கை!

வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழர்களுக்கு உதவவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.

"கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் லாரி ஓட்டுநர்களை மீட்கவேண்டும்” - வைகோ கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழர்களுக்கு உதவவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வைகோ.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

“கொரோனா என்றாலே நடு நடுங்க வைக்கின்ற இந்தக் கொடிய தொற்று நோய் அனைத்து மட்டத்திலும் வேகமாகப் பரவி வருகின்றது. உலகம் முழுவதும் இதுவரை ஐந்து இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 24 ஆயிரம் பேர் இறந்துவிட்டார்கள்.

அறிவியலில் நாங்கள்தான் முதல் இடம் என்று சொல்லிக்கொண்டு இருந்த அமெரிக்காதான் இப்போது இந்த நோயின் பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கின்றது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் இறந்து விட்டார்கள்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும்? இது இன்னும் வீரியமாகுமா? அல்லது தணியுமா? என்பதை ஒரு வார காலத்திற்குப் பிறகுதான் தெரிவிக்க முடியும் என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

"கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் லாரி ஓட்டுநர்களை மீட்கவேண்டும்” - வைகோ கோரிக்கை!

தமிழ்நாட்டைவிட்டு 20 நாட்களுக்கு முன்பு வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள்.

ஒரு லாரி ஓட்டுநர், ஐதராபாத்தில் இருந்து கதறுவதைக் காணொளியில் கண்டேன். சாப்பாடு இல்லாமல் நாங்கள் பட்டினி கிடக்கின்றோம். எங்களை அடிக்கிறார்கள். எங்களுக்கு நாதியே இல்லையா? என்று கேட்கிறார்கள்.

வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் உட்பட்டோரைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்பாட்டின் பேரில், தமிழ்நாடு தலைமைச் செயலாளரும், மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.”

இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வைகோ.

banner

Related Stories

Related Stories