Corona Virus

கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் - ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆபத்து காலங்களில் அசத்தும் தி.மு.க தலைவர்!

தமிழகத்தில் தொற்று ஏற்படுவதற்கு முன்பிருந்தே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் தி.மு.க.தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் தொற்று நாட்டையே அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் தொற்று ஏற்படுவதற்கு முன்பிருந்தே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் தி.மு.க.தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.

கொரோனா பாதிப்பைத் தடுக்க நகரங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும்சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள். அப்போதே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் தமிழகம் இன்று கொரோனாவால் உயிரிழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ தி.மு.க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என அறிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் - ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆபத்து காலங்களில் அசத்தும் தி.மு.க தலைவர்!

அதோடு, தமிழக அரசு இதற்கென கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தமிழகத் தொழிலதிபர்களும் இந்த பேரிடர்க் காலத்தில் மக்களுக்காக உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் தி.மு.க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இப்போது அ.தி.மு.க அரசு ஒதுக்கியுள்ள நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக் கவசம், சானிடைசர், சோப்பு ஆகியவற்றைத் திரட்டி வழங்கும் சேவையை தி.மு.க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும் எனவும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தி.மு.க-வினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், தமிழகத்தில் பாதிப்பு ஏற்படத் தொடங்கிய நாளிலிருந்தே கொரோனா தடுப்பு உபகரணங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் வந்தார் . தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது அறிவுறுத்தலுக்கிணங்க, தி.மு.க-வின் அனைத்து சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி வருவதோடு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும், பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக தி.மு.க திறம்படச் செயலாற்றி வருகிறது. கொரோனாவை விரட்டிடும் இந்தப் போரில் அனைவரும் விழிப்புடன் இருப்பதே இப்போதைக்கு அவசியம்.

banner

Related Stories

Related Stories