தமிழ்நாடு

கொரோனா கண்காணிப்பு முகாமிலிருந்து தப்பி காதலியைச் சந்தித்த இளைஞர் - மதுரை அருகே விபரீதம்! #CoronaAlert

மதுரையில் கொரோனா அறிகுறியுடன் கண்காணிப்பில் இருந்த நபர் தப்பி ஓடி காதலியைச் சந்தித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கட்டோரின் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்துள்ளது.

இதையொட்டி, நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா சிகிச்சைக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. அதன்படி தமிழக அரசு சார்பில், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் கண்காணிப்பில் இருந்த நபர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா கண்காணிப்பு முகாமிலிருந்து தப்பி காதலியைச் சந்தித்த இளைஞர் - மதுரை அருகே விபரீதம்! #CoronaAlert

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயில் இருந்து மும்பைக்கு வந்து விமானம் மூலம் கடந்த 21ம் தேதி மதுரை வந்தடைந்தார். மதுரையில் சோதனை செய்யப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்பட்டு மதுரை சின்ன உடைப்பு பகுதியில் உள்ள கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால் அங்கு தனி வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்த அந்த இளைஞர் இன்று அதிகாலை அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகாமைச் சேர்ந்த மருத்துவர்கள் அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுகொண்ட போலிஸார் தப்பியோடிய இளைஞரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அந்த இளைஞர் தனது காதலியைப் பார்க்கச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காதலி வீட்டில் பதுங்கி இருந்த இளைஞரை மருத்துவர்கள் உதவியுடன் கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து இளைஞர் பதுங்கியிருந்த அவரது காதலியின் வீட்டைத் தனிமைப்படுத்தவும் கண்காணிக்கவும் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories