அரசியல்

அன்று ‘கொரோனாவால் போனால்தான் உயிரா..?’ இன்று ‘கொரோனா அச்சம்’ - ‘அந்நியன்’ போல மாறிய ரங்கராஜ் பாண்டே!

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை சாலை விபத்துடன் ஒப்பிட்ட ரங்கராஜ் பாண்டே தற்போது ஊரடங்கு உத்தரவை நினைத்து கவலை கொள்வது குறித்து இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகின் சுமார் 180 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொள்ளை நோயான கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ். இதனால் உலகளவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இப்படிப்பட்ட ஆட்கொல்லி நோயை ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே சாலை விபத்துடன் ஒப்பிட்டு அண்மையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு, இணைய செய்தி தளத்திலும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், உலகையே அச்சுறுத்தி வரும் கண்ணுக்கு தெரியாத எதிரியை எவ்வாறு ஒரு சாலை விபத்துக்கு நிகராக ஒரு ஊடகவியலாளரால் ஒப்பிட முடிந்தது என சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் கண்டனங்கள் எழுந்தன.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 600க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டும் 13 பேர் உயிரிழந்தும் இருப்பது மிகப்பெரிய அச்சத்தை நாட்டு மக்களிடையே எழுப்பியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கை அறிவித்தது.

அன்று ‘கொரோனாவால் போனால்தான் உயிரா..?’ இன்று  ‘கொரோனா அச்சம்’ - ‘அந்நியன்’ போல மாறிய ரங்கராஜ் பாண்டே!

இந்நிலையில், சமீபத்தில் கொரோனாவால் உயிர் போவதுதான் கவலையா என கேள்வி கேட்ட ரங்கராஜ் பாண்டே தற்போது இன்னும் 20 நாளில் என்ன ஆகுமோ, நினைக்க நினைக்க நெஞ்சு வலிக்கிறது என ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த ட்வீட்டும் இணையத்தில் நெட்டிசன்களால் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அந்நியன் விக்ரம் மாதிரி ரங்கராஜ் பாண்டே நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories